t> கல்விச்சுடர் அனைத்து வகை தமிழக ஆசிரியர் சங்கங்களிடம் உதவிக்கரம் எதிர்பார்க்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்கள். - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 February 2019

அனைத்து வகை தமிழக ஆசிரியர் சங்கங்களிடம் உதவிக்கரம் எதிர்பார்க்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்கள்.



தமிழகத்தில் RTE அமலாக்கம் செய்யப்பட்ட சமயத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் செயல்முறைகள் வெளிவராத காலகட்டத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக சுமார் பத்தாயிரம் பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

அதன் காலகட்டம் 23/08/2010 முதல் 16/11/2012 வரை.

*
23/08/2010 - RTE ACT

16/11/2012  - தமிழக பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள்.
*



இந்த சமயத்தில் பணியில் சேர்ந்தவர்களில்,
அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகள் சார்ந்த ஆசிரியர்கள் சுமார் 9000 பேருக்கு TNTET லிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.



மீதமுள்ள சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்து கடந்த எட்டு வருடங்கள் TNTET லிருந்து நமக்கும் விலக்கு வரும் என காத்துக் கொண்டு உள்ளனர்.




இந்த சிக்கல் தீர தமிழக அரசு நான்கு மாதங்களில் தீர்வு காண வேண்டும் என கடந்த 07/09/2018 ல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. 07/01/2019 கடந்தும் கூட
இன்னும் 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TNTET விலக்கு அறிவிப்பு வரவில்லை.



மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் ஏற்கனவே இந்த TNTET நிபந்தனை ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து முழுவதும் விலக்கு தருவது பற்றிய பரிசீலனை உள்ளது என கூறியுள்ளார்.




அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பணியில் உள்ள இந்த வகை ஆசிரியர்கள் சில நிர்வாக காரணங்களால் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல இயலாது தவித்து வருகின்றன.




எளிதில் தீரவுள்ள இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்தில் உள்ள  எந்தவொரு ஆசிரியர் சங்கங்களும் பெரிய அளவில் இதுவரை உதவ முன்வரவில்லை.  அவ்வப்போது ஊடகங்கள் மட்டுமே நினைவுபடுத்தி வருகின்றன.



இந்த நிலையில் அனைத்து  ஆசிரியர் சங்கங்களையும் தாழ்ந்து வேண்டுவது யாதெனில் "இந்த நிலை பற்றி தங்கள் சார்பிலும் அரசின் மேலான கவனத்தில் எடுத்துச் சென்று எங்கள் பணிப்பாதுகாப்பு நிலைபெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதியே எங்களின் கடைசி வேலை நாள் ஆகிவிடும் என்ற அச்சத்தில் தவித்து வருகிறோம்" என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுகிறது.

நன்றி.

- சிவச்சந்திரபதி,
பட்டதாரி ஆசிரியர்,
TNTET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
கோவை கல்வி மாவட்டம்.


JOIN KALVICHUDAR CHANNEL