t> கல்விச்சுடர் +2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 April 2019

+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகத்திற்கு பதிலாக 1 புத்தகத்தை அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு








+2 படிப்பில் முக்கிய பாடங்களுக்கு 2 புத்தகங்களுக்கு பதிலாக ஒரே புத்தகத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு இனி ஒரே புத்தகம் பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில் புதிய பாடத்துடன் ஒரே புத்தகமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 



கடந்தண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் படி, அனைத்து பாடத்திற்கும் 2 புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன. முக்கியமாக இயற்பியல், வேதியியல், கணிதம், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்திட்டங்களுக்கு 2 புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 
இந்த புதிய பாடத்திட்டத்தின் காரணமாக 11ம் வகுப்பு மாணவர்களிடையே படிப்பு சுமை அதிகரிப்பது மட்டுமின்றி மனஅழுத்தம் ஏற்படுத்துவதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதன் காரணமாக, வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுபடக் கூடிய பாடத்திட்டத்தில் ஒரே புத்தகம் மட்டும் வழங்கும் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. 


இதுகுறித்து, பாடத்திட்ட குழுவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள பழைய பாடத்திட்டத்தின் படி, 2 புத்தகங்களாக இருக்கக்கூடிய 12ம் வகுப்பு வேதியியல், கணிதம், இயற்பியல், கணக்கு பதிவியல் பாடங்களுக்கு ஒரு பாட புத்தகங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்த புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவம் ஏப்ரல் மாதத்தில் முடிய உள்ளதாகவும், அதன் பிறகு அச்சடிப்பிற்கு செல்லும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.




JOIN KALVICHUDAR CHANNEL