உடுமலை அருகே வேடபட்டி அக்ஷரா வித்யா மந்திர் பள்ளியில், பகத்சிங் சிலம்பம் களி மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் உடுமலை ரோட்டரி தேஜஸ் சார்பில், கலை மற்றும் அறிவியல் திருவிழா நடந்தது.இதையொட்டி, பள்ளியில் நடந்த கண்காட்சியில், மூலிகைச்செடிகள், மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள், எடை போட பயன்படுத்தப்பட்ட கற்கள், நுாறாண்டுகள் பழமையான புத்தகங்கள், வானொலி பெட்டி, பழங்கால நாணயங்கள், பல்வேறு நாடுகளில் பயன்படுத்திய தபால்தலைகள் மற்றும் பலவகையான கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர், தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்று மாணவர்களின் கலைத்திறனை பாராட்டினர்.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||