நீட் தேர்வில் இம்முறை குறைந்தது ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலை உருவாகும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
