உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||