t> கல்விச்சுடர் இனி 24 மணி நேரமும் நெஃப்ட் ஆன்லைன் சேவை!- ரிசர்வ் வங்கி முடிவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 December 2019

இனி 24 மணி நேரமும் நெஃப்ட் ஆன்லைன் சேவை!- ரிசர்வ் வங்கி முடிவு



நெஃப்ட் எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை, தற்போது வார வேலை நாள்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டும் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். (சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையில்) இந்தச் சேவையைப் பயன்படுத்த பலரும் ஆர்வமாக இருந்தாலும், வார இறுதி விடுமுறைகளிலும் இரவு நேரத்திலும் பயன்படுத்த இயலாதது சிரமமாக இருந்தது.

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை


இந்தக் குறையைப் போக்கும் விதமாக நெஃப்ட் சேவையை, விடுமுறை நாள்கள் உட்பட வாரத்தின் 7 நாள்களும் 24 மணி நேரமும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

வரும் டிசம்பர் 16 முதல் நெஃப்ட் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையை, அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் செயல்படுத்த வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
நெஃப்ட் சேவையை ஓய்வின்றி செயல்படுத்துவதற்கேற்ப கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும்படியும் இந்தச் செய்தியை வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை
கடந்த ஜூலை 1 முதல் நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களுக்கான சேவைக்கட்டணங்களை ரத்து செய்து அறிவித்திருந்தது. தற்போது நெஃப்ட் சேவையை 24x7 பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதால், வங்கி வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.


JOIN KALVICHUDAR CHANNEL