t> கல்விச்சுடர் நாளை உள்ளாட்சி தேர்தல்.. 4 வாக்குச்சீட்டு.. எப்படி வாக்களிக்க வேண்டும்? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2019

நாளை உள்ளாட்சி தேர்தல்.. 4 வாக்குச்சீட்டு.. எப்படி வாக்களிக்க வேண்டும்?



*உள்ளாட்சி தேர்தல்... தவறாமல் வாக்களியுங்கள்..!!*

*நீங்கள் 18 வயது நிரம்பியவரா?*

இந்திய ஜனநாயக நாட்டில், மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

*உள்ளாட்சி தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?*

*இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்துள்ளனர்?*

*இனி வாக்களித்தாலும் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்?*
என்பதை நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

அடுத்து நம் கிராம ஊராட்சியை வழிநடத்த போகிறவர்களை தீர்மானிக்க வேண்டும்.

வாக்களிப்பது ஒரு முக்கியமான சமூகக் கடமை என்பதை உணர வேண்டும்.

கிராம வளர்ச்சிக்கு உதவும் ஒருவரை தேர்ந்தெடுக்க நாம் வாக்களிக்க வேண்டும்.

*வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை போதுமா?*

வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை மிகவும் முக்கியம்தான். அதைவிட முக்கியம், வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

சில காரணங்களால் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் போகலாம். அப்படி இருப்பின் நீங்கள் வாக்களிக்க முடியாது.

அதே நேரம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது, ஆனால் வாக்காளர் அட்டை உங்களிடம் இல்லை என்றால், உங்களால் வேறு ஆதாரங்களைச் சமர்ப்பித்து அதாவது மத்திய மற்றும் மாநில அரசால் உங்களுக்கு, உங்கள் புகைப்படத்துடன் வழங்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்கலாம்.

*எந்தெந்த நிறத்தில் வாக்குச்சீட்டு?*

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நான்கு வகையான பதவியிடங்களுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அவற்றை வேறுபடுத்திக் காட்ட வௌ;வேறு நிறங்களில் வாக்குச்சீட்டுகள் தயாராகி உள்ளன.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு *வெள்ளை* நிறத்திலும்

கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு *இளஞ்சிவப்பு* நிறத்திலும்

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு *பச்சை* நிறுத்திலும்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு *மஞ்சள்* நிறத்திலும்

வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.


*எப்படி வாக்களிக்க வேண்டும்?*

வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழக்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை எடுத்துவர வேண்டும். அப்படி இல்லையென்றால், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

முதல்நிலை வாக்குச்சாவடி அலுவலரிடம் பூத் சிலிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

அதன்பின் 2ம் நிலை வாக்குப்பதிவு அலுவலரிடம் இடதுகை ஆள்காட்டிவிரலில் மை வைக்கப்படும்.

பிறகு முதல்நிலை வாக்குச்சாவடி அலுவலரிடம் சென்று ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வெள்ளை நிற வாக்குச்சீட்டு பெற்றுக்கொண்டு...

பின்பு 3ம்நிலை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஊரக ஊராட்சி தலைவருக்கான இளஞ்சிவப்புநிற வாக்குச்சீட்டினை பெற்றுக்கொண்டு...

அடுத்தபடியாக 4ம்நிலை வாக்குப்பதிவு அலுவலரிடம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பச்சைநிற வாக்குச்சீட்டினை பெற்றுக்கொண்டு...

அடுத்ததாக 5ம்நிலை வாக்குப்பதிவு அலுவலரிடம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான மஞ்சள்நிற வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு...

பின்னர் 6ம் நிலை வாக்குப்பதிவு அலுவலரிடம் வாக்காளர் வாக்குச்சீட்டுகளை கொடுத்து அவற்றை நீள வாக்கிலும், பின்னர் குறுக்கு வாக்கிலும் மடித்துதர வேண்டும்.

பின்னர் வாக்காளர் வாக்குப்பதிவு செய்யும் இடத்திற்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்து ஏற்கனவே வாக்குச்சீட்டு மடித்து வைத்ததை போன்றே மடித்து வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.

*நம் வாக்கு... நம் உரிமை...

*சிந்தியுங்கள்... வாக்களியுங்கள்..!!


JOIN KALVICHUDAR CHANNEL