t> கல்விச்சுடர் 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆயத்த பணிகள். - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

19 December 2019

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஆயத்த பணிகள்.





ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள் தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பணிகள் முடிக்கப்பட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தேர்வு மையங்களை அந்தந்த குறுவளமைய தலைமை ஆசிரியருடன் ஒருங்கிணைந்து தேர்வு மையங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஐந்தாம் வகுப்பில் பத்துக்கு அதிகமாக மாணவர்கள் உள்ள பள்ளிகள் அந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.

10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் அருகில் உள்ள ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ள பள்ளியுடன் ஒன்றிணைத்து தேர்வு மையம் அமைக்கலாம்.

எட்டாம் வகுப்பை பொருத்தவரை மூன்று கிலோமீட்டர்களுக்கு மிகாமல் தேர்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளிலும் தேர்வு மையம் அமைக்கலாம்.

EMIS ல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விபரங்களும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

EMIS ல் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத இயலாது. தனியார் பள்ளிகளுக்கும் மேற்கண்ட தகவலை தெரிவித்து EMIS ல் உள்ள விவரங்கள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்.


JOIN KALVICHUDAR CHANNEL