t> கல்விச்சுடர் அரசுப்பள்ளிகளில் ''ஆன்லைன்'' தேர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 December 2019

அரசுப்பள்ளிகளில் ''ஆன்லைன்'' தேர்வு

அரசுப்பள்ளி மாணவர்களின் திறன்களை பரிசோதிக்கும் நோக்கில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க 67 பள்ளிகளில் மட்டும், ஸ்கில் டெவலெப்மென்ட் கோர்ஸ் எனும், அழகுக்கலை, தையல், மெக்கானிக்கல், விவசாயம் குறித்த தொழிற்கல்வி பாடங்களுக்கு, சிலபஸ் உருவாக்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.கோவையில் நான்கு பள்ளிகளில், தொழிற்கல்வி பாடத்திற்கு வகுப்புகள் கையாளப்படுகின்றன. இதேபோல், மற்ற பாடங்களில், பள்ளி மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், ஆன்லைன் வழி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரையாண்டு தேர்வுக்கு பின், ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு, ஆன்லைன் வழி தேர்வு நடத்தப்படும். பாடத்திட்டம் மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், வினாத்தாள் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன என்றனர்.


JOIN KALVICHUDAR CHANNEL