t> கல்விச்சுடர் நாளை கேங்மேன் தேர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 December 2019

நாளை கேங்மேன் தேர்வு

சென்னை, பேசின்பிரிட்ஜில், நாளை, கேங்மேன் பதவிக்கான, உடல்தகுதி தேர்வு நடக்க இருப்பதாக, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.தமிழக மின் வாரியம், 43 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகின்றன. சென்னை மத்திய பகிர்மான வட்டத்தின் கீழ், தி.நகர், அண்ணா சாலை, எழும்பூர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகள் வருகின்றன.மேற்கண்ட பகுதிகளில், மின் வாரியத்தின், கேங்மேன் பதவிக்கு விண்ணப்பித்தோருக்கு, இம்மாதம், 2, 3ம் தேதிகளில், உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க இருந்தது. மழை காரணமாக, தள்ளி வைக்கப்பட்ட அந்த தேர்வு, 14, 16ம் தேதிகளில், பேசின்பிரிட்ஜ் அருகில் உள்ள, பழைய, ஜி.எம்.ஆர்., மின் நிலைய வளாகத்தில் நடக்கும் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL