t> கல்விச்சுடர் மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம்: தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 December 2019

மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம்: தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவு





உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இல. சுப்ரமணியன் வெளியிட்ட சுற்றறிக்கை வருமாறு:-
அனைத்து அரசு பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் விருப்பமுள்ள மாற்று திறனாளிகளை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி கொள்ளுமாறும் விருப்பமில்லாத மாற்றுத்திறனாளிகளை கட்டாயப்படுத்த கூடாது என்றும் இந்த ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளது. ஆகவே மாற்றுத்திறனாளிகளின் திறன் விருப்ப அடிப்படையில் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL