t> கல்விச்சுடர் கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 December 2019

கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்



திருவண்ணாமலை காத்திகை தீப விழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இரண்டாயிரத்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 10ம் தேதி கார்த்திகை தீபம் நடைபெறுவதை முன்னிட்டும், 11ம் தேதி நடைபெற உள்ள பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும்  9ம் தேதி முதல் 12ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதன்படி, சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளும், தாம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு பகுதியில் இருந்து ஆயிரத்து 112 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். திருச்சியில் இருந்து 450 சிறப்பு பேருந்துகளும், சேலம், பெங்களூரு, ஓசூர் பகுதிகளில் இருந்து 251 சிறப்பு பேருந்துகளும், கோவையில் இருந்து 122 பேருந்துகளும், மதுரையில் இருந்து 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

JOIN KALVICHUDAR CHANNEL