t> கல்விச்சுடர் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி! சுற்றறிக்கை உண்மையில்லை - தமிழக அரசு விளக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 December 2019

அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி! சுற்றறிக்கை உண்மையில்லை - தமிழக அரசு விளக்கம்


தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக ஒரு சுற்றறிக்கை, தமிழக அரசின் சார்பில் வெளியானது போல் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!





50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு செய்யப் படுவதாகவும், அதற்கான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுபியதாக தகவல் வெளியானது.





டிசம்பர் 10ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவு இடப் பட்டிருப்பதாகவும், விவரங்களை அனுப்பத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.


ஆனால் இந்தச் செய்தி வைரலானதும், கட்டாய ஓய்வு சுற்றறிக்கையில் உண்மை இல்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு சார்பில் தகவல் வெளியானது.

Source: Dinasari


JOIN KALVICHUDAR CHANNEL