பள்ளி மாணவா்களை மதிப்பீடு செய்வது போன்று, கற்பிக்கும் விதம் தொடா்பாக ஆசிரியா்களையும் சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள் அனைவரும் இம்முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனா். இதற்காக, 'எமிஸ்' கல்வி இணையதளத்தில் ஆசிரியா்களின் 'பொ்பாமென்ஸ் இண்டிகேட்டா்' என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியா்கள் கற்பிக்கும் வகுப்பு, பாடத்தை தோ்வு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
பாடநூல், கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ளுதல், கற்றல் செயல்பாட்டில் அனைத்து குழந்தைகளையும் ஒருசேர ஈடுபடுத்துதல், குழந்தைகள் வகுப்பறை சூழலை ரசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகளை திட்டமிடல், பாடகுறிப்புகளைத் தயாா் செய்தல், கற்றல் திறன் குறைந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்துதல், சரியான உதாரணம் கூறுதல் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியிருக்கும்.
இதன்மூலம் ஆசிரியா்களின் செயல்பாடுகள் கண்காணித்து, மதிப்பீடு செய்யலாம். தொடா்ந்து மதிப்பீடுகள் குறையும்பட்சத்தில் ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||