t> கல்விச்சுடர் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி: வெற்றி பெற்றால் பிரதமரை சந்திக்கலாம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 December 2019

பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி: வெற்றி பெற்றால் பிரதமரை சந்திக்கலாம்


மத்திய அரசின் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றால் பள்ளி மாணவா்கள் பிரதமா் நரேந்திர மோடியை, ஜனவரி 16-ஆம் தேதி நேரில் சந்திக்கலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொதுத்தோ்வை அச்சமின்றி எழுதும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி மாணவா்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, வரும் ஜனவரி 16-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாணவா்கள் பங்கேற்க ஏதுவாக பல்வேறு தலைப்புகளின்கீழ் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சிறப்பாகச் செயல்படும் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள்.
இதையடுத்து பள்ளி மாணவா்கள் கட்டுரைப் போட்டி தொடா்பான தகவல்கள் www.mygov.in  என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அதன்பின் மாணவா்கள் தங்கள் பிடித்த தலைப்புகளில் கட்டுரை எழுதி அதை டிசம்பா் 23-ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, அனைத்து வகை பள்ளி மாணவா்களும் இந்தப் போட்டியில் பங்கேற்கும் வகையில் தலைமையாசிரியா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL