t> கல்விச்சுடர் ஓய்வு ஆசிரியை போராடி கூச்சலிட்டதால் திருடர்கள் ஓட்டம் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

13 December 2019

ஓய்வு ஆசிரியை போராடி கூச்சலிட்டதால் திருடர்கள் ஓட்டம்


ஓய்வு பெற்ற ஆசிரியை, சங்கிலி பறிக்க முயன்ற இருவரிடம் போராடி, கூச்சலிட்டதால், மக்கள் வரவே, அவர்கள் மொபட்டில் தப்பினர். சேலம், சூரமங்கலம் அருகே, நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் ஷியாமளாதேவி, 60; ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, வீடு அருகே, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து, மொபட்டில் வந்த இருவர், ஷியாமளா அணிந்திருந்த, எட்டு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்த ஷியாமளாதேவி, சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே, மக்கள் ஓடிவர, அந்த இருவரும் தப்பி விட்டனர். இதுகுறித்து, ஷியாமளாதேவி புகாரளிக்காத நிலையில், சங்கிலி பறிப்புக்கு முயன்ற இருவர் குறித்து, சூரமங்கலம் போலீசார், அப்பகுதியிலுள்ள, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்து வருகின்றனர்.


JOIN KALVICHUDAR CHANNEL