t> கல்விச்சுடர் ஆபத்தில் ஐந்தே நிமிடத்தில் வந்த சென்னை போலீஸ்- “காவலன் ஆப்” இன்ஸ்டால் பண்ணியாச்சா! காவலன் செயலி பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 December 2019

ஆபத்தில் ஐந்தே நிமிடத்தில் வந்த சென்னை போலீஸ்- “காவலன் ஆப்” இன்ஸ்டால் பண்ணியாச்சா! காவலன் செயலி பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்








நாடு முழுவதும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ள விஷயம் 'காவலன் என்ற மொபைல் ஆப் ஆகும். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார். இந்த ஆப் குறித்த விளம்பர நோட்டீஸ்கள் மாநிலம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெயிட்டிங்கில் இருந்த 'வெங்காய மாலை - அப்படியே எஸ்கேப் ஆன ப.சிதம்பரம்! இந்நிலையில் 'காவலன் ஆப் மூலம் தகவல் கொடுத்த ஐந்தே நிமிடங்களில் காவல்துறை உதவிக்கரம் நீட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த சம்பவம் மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் இருந்து காவலன் செயலி மூலம் பெண் ஒருவரிடம் இருந்து நேற்று இரவு 8.30 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு?- ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை! இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்தனர். அதாவது ஆர்.கே.நகர், ஆஸ்வல் கார்டன், சிபி சாலை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அதேசமயம் உதவி கோரிய பெண்ணின் வீட்டிற்கு 5 நிமிடங்களில் போய் சேர்ந்தனர். அப்போது அங்கு 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசைக் கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர். ஒரு வெங்காயத்தை கூட? இது எவ்வளவு பெரிய அவமானம் - சீமான் சரமாரி கேள்வி! அந்த நபர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சலீம்(41), தாவூத்(38) என்று தெரியவந்தது. இவர்கள் கூரியர் நிறுவனத்தில் இருந்து வருவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அவரிடம் தவறாக நடந்து கொள்ள திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலன் செயலி
பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் (Download):

1. Google Play Store-ல் தேடுதல் பட்டையில் (Search
    Bar) “Kavalan SOS” என்று டைப் செய்ய வேண்டும்.
2. Kavalan SOS என்ற செயலியை Install என்ற
    பட்டனை அழுத்த வேண்டும்.
3. தற்போது 7 அனுமதி கோரிக்கை ஒன்றன் பின்
    ஒன்றாக கேட்கப்படும். அவை அனைத்திற்கும்
    Allow என்று அனுமதி கொடுக்க வேண்டும்.
4. தற்போது தாங்கள் வைத்திருக்கும் ஆன்டிராய்டு
    கைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டது.

செயலியை செயல்படுத்தும் வழிமுறைகள்; (Installation):

I) Registration Module:

1. இந்த பகுதியில் தங்களது மொபைல் எண்¸ பெயர்¸
    மற்றொரு மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு
    செய்ய வேண்டும்.
2. இந்த நிலையில் தங்களது கைப்பேசியல்  GPS
    வசதியை ON செய்ய அனுமதி கேட்கப்படும். GPS
    ON-ல் இருந்தால் மட்டுமே செயலி துள்ளியமாக
    செயல்பட முடியும்.
3. இந்த செயல்முறை முடிந்த பின்பு  Next கொடுக்க
    வேண்டும்.

II) Profile Module:

1. Kavalan Welcomes (தங்களது மொபைல் எண்) என்ற
    பக்கம் திரையில் தோன்றும்.
2. தங்களது புகைப்படம் தேவையென்றால்
   மொபைல் கேமரா மூலமாகவோ அல்லது கேலரி
   மூலமாகவோ தேர்வு செய்து கொள்ளலாம்.
3. Email-ID என்ற பகுதியில் தங்களது இ-மெயிலை
    கொடுக்க வேண்டும்.
4. Date of Birth என்ற பகுதியில் தங்களது பிறந்த
    தேதியை கொடுக்க வேண்டும்.
5. Male/Female என்ற பகுதியில் உரியதை தேர்வு
    செய்ய வேண்டும்.
6. Full Address என்ற பகுதியில் தங்களது முழு
    முகவரியை கொடுக்க வேண்டும் அல்லது அந்த
    பட்டையில் (Bar) வலது பக்கத்தில் தோன்றும்
    Location படத்தை கிளிக் செய்ய Google Map
    உதவியுடன் தங்களது முகவரியை தேர்வு
    செய்யலாம்.
7. City என்ற பகுதியில் தங்களது நகரத்தினை பதிவு
    செய்ய வேண்டும்.
8. Work Address என்ற பகுதியில் தங்களது பணிபுரியும்
    அலுவலக முகவரியை தேவையென்றால் பதிவு
    செய்ய வேண்டும்.
9. இவை அனைத்தும் முடிந்த பின்பு Sign UP
    கொடுக்க வேண்டும்.

III) Activation Module:

1. இந்த பகுதியில் தோன்றும் பட்டையில்
    தங்களுக்கு குறுஞ்செய்தி மூலம்
    அனுப்பப்பட்டுள்ள 6 இலக்க (Activation Code) ரகசிய
    எண்னை உள்ளீடு செய்த வேண்டும்.பின்பு Next
    கொடுக்க வேண்டும்.

IV) Emergency Contact Module

1. இந்த பகுதியில்  குறைந்தபட்சம் 2¸ அதிகபட்சம் 3
    நம்பகமான நபர்களின் மொபைல் எண்களை பதிவு
    செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
2. இதில் மொபைல் எண்¸ பெயர்¸ உறவுமுறை
   ஆகியனவற்றை கொடுக்க வேண்டும்.
3. Next பட்டனை அழுத்த வேண்டும்.

தற்போது செயலியானது முழுமையாக பதிவிறக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது தங்களது மொபைல் திரையில் “Kavalan SOS” செயலியின் முகப்பு திரையானது தோன்றும். அதில் உள்ள SOS என்ற பட்டனை 5 விநாடிகள் அழுத்தி பிடிக்க தங்களது அபாய அழைப்பானது சென்னையில் உள்ள “Master Police Control Room” சென்று தங்கள் அருகாமையில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது காவல் அதிகாரிக்கோ அழைப்பு அனுப்பப்படுகிறது. அதன்மூலம் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


JOIN KALVICHUDAR CHANNEL