t> கல்விச்சுடர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

31 December 2019

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்...



அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வரும் ஆண்டுக்கான நீட் தேர்வு 2020ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் அவை நிறைவு பெறுகிறது. மார்ச் 27ம் தேதி மாணவர்கள் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். நீட் தேர்வுக்கு இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 

JOIN KALVICHUDAR CHANNEL