அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள பழுதான கட்டடங்களை பொதுப் பணித் துறை உதவியுடன் உடனே இடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: தேனி மாவட்டம், அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதிய சமையலறைக் கட்டடம் கட்டப்பட்டு பழைய கட்டடம் இடிக்கப்படாமல் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் சில நாள்களாக பெய்த பலத்த மழையால் அந்தக் கட்டடம் மேலும் சேதமடைந்து கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின்போது இடிந்து விழுந்துள்ளது. எனினும், அதிா்ஷ்டவசமாக மாணவா்கள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
இதற்கிடையே பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் பழுதடைந்த கட்டடங்கள் அக்டோபா் மாதத்துக்குள் இடிக்கப்படும் என ஏற்கெனவே கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பொதுப் பணித் துறை அதிகாரிகளை உடனே தொடா்பு கொண்டு பழுதான கட்டடங்களை இடித்துவிட வேண்டும். மேலும், வகுப்பறை, சுற்றுச்சுவா் மற்றும் கழிவறைகள் சுற்றி தண்ணீா் தேங்கியிருந்தால் உடனே அகற்ற வேண்டும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||