t> கல்விச்சுடர் தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 December 2019

தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

 வலுகூடிய கீழ்த்திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
 தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்தது. தற்போது, வலுகூடிய கிழக்குத் திசை காற்று காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 13) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. புதன்கிழமை காலை 8.30 மணியுடன் கூடிய கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பெய்யவில்லை. சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

JOIN KALVICHUDAR CHANNEL