இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் டிச., 30ல் நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ள இயலாததால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 169 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்காக தேர்தல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இறுதிகட்ட பயிற்சி வகுப்பு மற்றும் ஓட்டுப்பெட்டிகளை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (டிச.,29) நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்தவர்களை தொடர்பு கொண்டபோது, 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது தெரியவந்தது. பலர் அலைபேசியை எடுக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக அங்கன்வாடி பணியாளர்களை தயார் நிலையில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.