t> கல்விச்சுடர் ''தொடர்பு எல்லைக்கு வெளியில்'' தேர்தல் அலுவலர்கள் - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

29 December 2019

''தொடர்பு எல்லைக்கு வெளியில்'' தேர்தல் அலுவலர்கள்

இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் டிச., 30ல் நடக்கிறது. இதற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்த 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ள இயலாததால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 169 ஓட்டுச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. 

இதற்காக தேர்தல் அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இறுதிகட்ட பயிற்சி வகுப்பு மற்றும் ஓட்டுப்பெட்டிகளை ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு இன்று (டிச.,29) நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்தவர்களை தொடர்பு கொண்டபோது, 20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது தெரியவந்தது. பலர் அலைபேசியை எடுக்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடாக அங்கன்வாடி பணியாளர்களை தயார் நிலையில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL