தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனுமதி அளித்துள்ளது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வார்டு வரையறைகளை முடித்த பின் 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
தேர்தல் நடைபெறாத மாவட்டங்களின் பட்டியல்
நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.