t> கல்விச்சுடர் `இனி அலுவலக வேலைகளில் வாட்ஸ்அப், டெலிகிராம் வேணாம்!' - வருகிறது அரசின் ஜிம்ஸ் ஆப்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2019

`இனி அலுவலக வேலைகளில் வாட்ஸ்அப், டெலிகிராம் வேணாம்!' - வருகிறது அரசின் ஜிம்ஸ் ஆப்!


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் கணக்குகளை `பெகாஸஸ்’ என்னும் ஸ்பைவேர் உளவு பார்த்தது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகளவில் 1,400 வாட்ஸ்அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டன. இதில் இந்தியாவைச் சேர்ந்த 121 முக்கிய நபர்களின் கணக்குகள் அடங்கும். இன்று அலுவலக வேலைகள் தொடங்கி அனைத்துமே வாட்ஸ்அப்பில்தான் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தனக்கென பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கு ஜிம்ஸ் (Government Instant Messaging System, GIMS) என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தச் செயலியானது ஒடிசா போன்ற சில மாநிலங்களில் சோதனைக் கட்டத்தில் இருக்கிறது.


இந்திய அரசானது, மத்திய அரசு அலுவலகங்களிலும் மாநில அரசு அலுவலகங்களிலும் தங்களுக்குள் தகவல்கள் பரிமாற்றத்திற்கென இந்த ஜிம்ஸ் ஆப்பை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளிநாட்டு ஆப்களால் ஏற்படும் தகவல் திருட்டு மற்றும் ஊடுருவலைத் தடுக்கமுடியும் என்பதே இதன் முக்கியக் காரணமாகும்.
ஜிம்ஸ் அரசு துறைகளில் எப்படியான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Source: Vikatan


JOIN KALVICHUDAR CHANNEL