பொங்கல் விடுமுறையை கொண்டாட்டத்தோடு கழித்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இனி நீண்ட விடுமுறை என்பது இந்த ஆண்டு முழுவதும் இல்லை.
பொங்கல் விடுமுறைக்கு பிறகு இனிவரும் விடுமுறைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிறுகளில்தான் வருகிறது. குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி என அனைத்துப் பண்டிகைகளும் இதில் அடங்கும். ஜன.,11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபவித்த அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் நீண்ட விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.