. -->

Now Online

FLASH NEWS


Tuesday 7 January 2020

தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் -முதல்வர் பழனிசாமி

சென்னைசட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தின் போது, அமைச்சர் வேலுமணி பேசினார். அப்போது இடைமறித்து பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது என சொல்லுமாறும், நேர்மையாக நடைப்பெற்றது என சொல்லாதீர்கள் என்றும் பேசியதால் கடும் விவாதம் ஏற்பட்டது.


துரைமுருகனுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட்டது எனவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தான் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தேர்தல் அதிகாரியோடு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்திலும் திமுக மாவட்ட செயலாளர் தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி  தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை. இந்த தேர்தலை அரசு ஊழியர்கள் தான் நடத்தின்ர். தொடர்ந்து 30 மணி நேரம் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர்.தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.நடந்து முடிந்த தேர்தலில் எந்த பின்புலமும் இல்லாத 400-க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றதே இந்த தேர்தல் நேர்மையாக நடைபெற்றதற்கு உதாரணம்.ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவை விட திமுக 1.5 சதவீத வாக்குகள் தான் அதிகமாக பெற்றுள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் 0.5 வாக்குகள் தான் திமுக அதிகம் பெற்றுள்ளது என கூறினார்.