கர்நாடகாவில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கினாலோ, கட்டணங்களை உடனடியாக செலுத்தவேண்டும் என்று வற்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார், கொரோனா நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஒரே பள்ளியில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டுக்கான கட்டணத்தைக் கட்டும்படி வற்புறுத்தக் கூடாது என்று தெரிவித்தார்.
