கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ள மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இந்தியாவில் இதுவரை 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு எதிராக இந்தியா கடுமையான போராடி வருகிறது.
இந்நிலையில், கரோனாவைத் தடுக்க மக்கள் தங்களால் இயன்றி சிறிய தொகையானாலும் அதை நிதியுதவியாக அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கிக் கணக்கு பெயர்: PM CARES
கணக்கு எண்: 2121PM20202
IFSC Code: SBIN0000691
SWIFT CODE: SBININBB104
வங்கியின் பெயர் மற்றும் கிளை: State Bank of India, New Delhi Main Branch
UPI ID: pmcares@sbi
மேலும் pmindia.gov.in இணைப்பின் ஊடாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு, இணையவழி பணப்பரிமாற்றம், யுபிஐ (பிம், ஃபோன்பே. அமேஸான் பே, கூகுள் பே, பேடிஎம், மொபிக்விக்), RTGS/NEFT மூலமும் நிதியுதவி அளிக்கலாம்.
