தஞ்சம்மாள் நினைவு
தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
திருக்குறளில் சாதனை!
திருச்சி சேவா சங்கம், தஞ்சம்மாள் நினைவு தொடக்கப்
பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் ம.வினோதினி, மா.வர்ஷினி,
ஜெ.கௌசல்யா ஆகியோர் திருக்குறளில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
எந்த அதிகாரத்தில் இருந்து எந்த குறளை எப்படி கேட்டாலும்
இவர்கள் மள.... மள..... வென்று சொல்லி விடுவார்கள்.
இந்த சாதனை மாணவிகள், கடந்த 7ந் தேதி திருச்சி மேற்கு
சரக பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டார்கள். மேடையேறிய
3 மாணவிகளிடம் ஏராளமான ஆசிரியர்கள் திருக்குறளை
மாறி மாறி கேட்டார்கள். ஆனால் அத்தனைக்கும்
சளைக்காமல் இந்த மாணவிகள் திருக்குறளை
ஒப்புவித்தனர். இந்த மாணவிகளை திருச்சி மேற்கு சரக
வட்டார கல்வி அலுவலர் இரா.தமிழ்ச்செல்வன் பாராட்டி
பரிசளித்தார். ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. தஞ்சம்மாள்
நினைவு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரதிமணி
மாணவிகளுக்கு திருக்குறள் பயிற்சி அளித்த ஆசிரியை
சிவப்பழனி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். சேவாசங்கம்
செயலர் சி.சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த சாதனை
மாணவிகளை பாராட்டி வாழ்த்தினர்.
மேலும் இவர்கள் திருக்குறளின்
சிறப்புகள், ஆத்திசூடி, தமிழ் புத்தாண்டுகள் 60,
16 செல்வங்கள், உலக அதிசயங்கள் 9, உலகில்
மிகப் பெரியவை 9, நட்சதிரங்கள், கிரகங்கள்,
ராசிகள் போன்றவற்றின் பெயர்களையும்
சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாணவர்களுக்கு இப்பள்ளியின்
இடைநிலை ஆசிரியை
செ.சிவபழனி பயிற்சி அளித்துள்ளார்.

