t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரொனா - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 April 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரொனா - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்




தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.



நேற்றுவரை 309ஆக இருந்த கொரொனா பாதிப்பு இன்று 411ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,

கரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள்: 2,10,538

தனிமை வார்டுகளில் உள்ளவர்கள்: 23,689

வென்டிலேட்டர்கள்: 3,396

தற்போதைய சேர்க்கை: 1,580

ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,684 (எதிர்மறை: 2789, நேர்மறை: 411 (டிஸ்சார்ஜ்: 7), செயல்பாட்டின் கீழ்: 484) என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 2,789 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், இதுவரை 411 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 484 பேரின் முடிவுகள் வரவேண்டியுள்ளதாகவும் தமிழாக்கி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL