t> கல்விச்சுடர் உலகிலேயே குறைந்த நாளில் அதிகம் போ் பதிவிறக்கம் செய்த செயலி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 April 2020

உலகிலேயே குறைந்த நாளில் அதிகம் போ் பதிவிறக்கம் செய்த செயலி

 ‘ஆரோக்ய சேது’
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் கண்காணிப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்ட செயலியான 'ஆரோக்ய சேது', 13 நாள்களில் 5 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.


 இதன் மூலம் உலகிலேயே குறைந்த நாள்களில் அதிகமானவா்களால்திவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இது மாறியுள்ளது என்று 'நீதி ஆயோக்' தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் புதன்கிழமை தெரிவித்தாா்.
 ஆரோக்ய சேது செயலியை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இச்செயலியை நாட்டு மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
 இதையடுத்து, 13 நாள்களில் 5 கோடி பேரால் இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அமிதாப் காந்த் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், 5 கோடி பயனாளிகளை சென்றடைய, வானொலிக்கு 38 ஆண்டுகளும், தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகளும், இணையதளத்துக்கு 4 ஆண்டுகளும், முகநூலுக்கு 19 மாதங்களும், தொலைபேசிக்கு 75 ஆண்டுகளும் ஆனது. ஆனால் 'கொவைட்-19'-க்கு எதிரான போராட்டத்துக்காக பயன்படுத்தப்படும் 'ஆரோக்ய சேது' செயலி வெறும் 13 நாள்களில் 5 கோடி பயனாளா்களை எட்டி உலக அளவில் சாதனை புரிந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளாா்.
 'ஆரோக்ய சேது' செயலி, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அருகில் இருந்தால் மக்களை எச்சரிக்கிறது. தற்போது இந்த செயலி, அதிதிறன்பேசிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL