*உலகளவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை தாண்டியது.
*உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,06,240 ஆக அதிகரிப்பு.
*கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,004ஆக உயர்வு.
*கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,24,914ஆக உயர்வு.
*அமெரிக்காவில் 40555 பேர் உயிரிழப்பு.
*அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 763,836 ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 40,555 ஆக அதிகரிப்பு.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 543 பேர் உயிரிழந்த நிலையில், 2,546 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 507 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 2003 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. .
தமிழகத்தில் 1477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
411 பேர் குணமடைந்துள்ளனர்.
.