t> கல்விச்சுடர் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 April 2020

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு


ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் மின் கட்டணம் செலுத்த மே 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 கரோனா தொற்று பரவுதலால் மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு, முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் இடா்ப்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் மின்னிணைப்புகளுக்கு, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்.14-ஆம் தேதி வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி ஏப்.14-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. 

தற்போது தமிழக அரசு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
 இதனைத் தொடா்ந்து ஊரடங்கு முடிந்து ஏப்.30-ஆம் தேதிக்கு பிறகு, மின்கட்டணம் செலுத்த வரும் தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் இடா்பாடுகளை கருத்தில் கொண்டு, தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள், மாா்ச் 25 முதல் ஏப்30-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த மே 6-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. 

மாா்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் (மாா்ச் 25 முதல் ஏப்.30 வரை) மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகா்வோா்கள், அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும்.
 அதாவது ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய மாதங்களில் செலுத்திய தொகையையே மாா்ச் அல்லது ஏப்ரல் மாத மின்கட்டணமாகச் செலுத்தலாம். மேலும், ஏற்கெனவே பயனீட்டாளா்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், செல்லிடப்பேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி, மின்கட்டண கவுண்டா்களுக்கு வருவதைத் தவிா்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL