t> கல்விச்சுடர் திருச்சி பிரதான சாலை சந்திப்புகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரொனா விழிப்புணர்வு வண்ண ஓவியம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

20 April 2020

திருச்சி பிரதான சாலை சந்திப்புகளில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கொரொனா விழிப்புணர்வு வண்ண ஓவியம்



இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சேர்மேன் மற்றும் இந்திரா கணேசன் கல்வி குழும செயலருமான ராஜசேகர் அறிவுறுத்தலின்படி திருச்சியில் முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் கொரொனா பரவலை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியமும், வாசகங்களும் வரையப்பட்டு வருகின்றன. திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் முன்பு உள்ள எம்ஜிஆர் சிலை உள்ள பிரதான சந்திப்பு சாலை இருபுறமும் விழித்திரு, தனித்திரு, விலகி இரு என்ற வாசகத்துடன் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக கவசம் அணிவதன் அவசித்தையும் வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டுமென்பதையும் ஓவியம் மூலம் பொதுமக்கள், பாதசாரிகள், வாகனத்தில் செல்வோர் அனைவரும் அறியும் விதமாக வண்ண ஓவியம் வரையப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் மக்களிடம் விழிப்புணர்வு வாசகத்தை கொண்டு செல்லும் நோக்கில் விளக்கொளியில் ஒளிரும் வண்ணத்தில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு ஓவியம் வரையப் பட்ட இடத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ஜவகர் ஹசன், செயற்குழு உறுப்பினர் ஜலாலுதீன், ஆயுள் கால உறுப்பினர்கள் செந்தில்குமார்,குணா, யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர் மக்களுக்கு முகக் கவசம் அணிய அறிவுறுத்தினார்கள்.

JOIN KALVICHUDAR CHANNEL