வங்கி கடனாளிகளில் சிரமங்களை குறைக்கும் விதமாக 3 மாத தவணை தொகை செலுத்துவதில் இருந்து ரிசர்வ் வங்கி விலக்கு அளித்திருந்தது.
அதன் மூலம் வீட்டுக்கடன். வாகனக்கடன், தனிநபர் கடன் வாங்கியவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என தெரிவித்தது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தியுள்ள பல்வேறு வங்கிகளும், 3 மாதங்களுக்கு வட்டி கணக்கிடுவதாக கூறியுள்ளன.
அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
அசல் கடன் தொகையுடன், 3 மாத வட்டித் தொகையையும் சேர்க்கும் வங்கிகள், இரண்டும் சேர்ந்த மொத்த தொகைக்கு வட்டியை கணக்கிட உளளன.
அதன்மூலம் 3 மாத தவணை செலுத்தாமல் விட்டால், கட்ட வேண்டிய அசல் தொகை அதிகரிக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது வங்கிகளுக்கு ஆதாயம் என்றும், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.