சூம் (Zoom)), கூகுள் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) போன்ற வீடியோ கால் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவனம் தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது:
_பிரபல வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு நிறுவன சிஇஓ பில் விண்டர்ஸ், தங்கள் மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். அலுவல் ரீதியான கூட்டத்தில் மோசமான படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ சாட்டிங் போன்றவை சூம் செயலியில் குறுக்கிட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.