. -->

Now Online

FLASH NEWS


Saturday 23 May 2020

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகமா?.. மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் தயார் செய்வதற்கான பணிகளும் தொடர்ச்சியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது வரும் ஜுன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மனநிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 10-ம் மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கலவித்துறை சார்பில் ஒரு நூதன முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மிஸ்டு கால் கொடுத்து பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம். கொரோனா அச்சமின்று எவ்வாறு தேற்றவை எழுதுவது என்பது குறித்து ஆடியோ ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.