t> கல்விச்சுடர் அரசுப்பள்ளி ஆசிரியர் மர்மச்சாவால் அதிர்ச்சி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 May 2020

அரசுப்பள்ளி ஆசிரியர் மர்மச்சாவால் அதிர்ச்சி

 அந்தியூரில் அரசுப்பள்ளி ஆசிரியர், மர்மமாக இறந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர், அரசு மருத்துவமனை பின்புறம் வசித்தவர் நவநீத கிருஷ்ணன், 42; வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள, மாத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர். மனைவி சுடர்மணி, 
இரு குழந்தைகள் உள்ளன. மனைவியுடன் கடந்த சில நாட்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் நேற்று மதியம், வீட்டிலிருந்த நவநீத கிருஷ்ணன் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில், ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. 

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நல பாதிப்பால் இறந்தாரா? என்பது, உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என்று, அந்தியூர் போலீசார் தெரிவித்தனர்.
Source Dinamalar

JOIN KALVICHUDAR CHANNEL