. -->

Now Online

FLASH NEWS


Monday 29 June 2020

NHIS பிடித்தம் ரூ.50 உயர்வு என்ற தகவல் உண்மையா?


கல்வி இணைய சேவையர்கள் NHIS பிடித்தம் ரூ.50 உயர்வு என தகவல் பதிவிட்டு வருகிறார்கள். அதனைப் பற்றிய சிறு விளக்கம்.

NHIS க்கு பிடித்தம் ரூபாய் 50 உயர்வு என்பதாக தவறான புரிதலுடன் தகவல் பல கல்வித்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது 24.6.2020 அன்று NHIS திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை 279 வெளியிடப்பட்டது. அதில் பார்வை 2 - ல் உள்ள 10.12.2018 ல் வெளியிடப்பட்ட அரசாணை 391 பற்றி பத்தி - 2 ல் விளக்கப்பட்டுள்ளது. அதாவது 10.12.2018 ன் ஆணையில் non network hospitals அதாவது எந்தெந்த மருத்துவமனைகளில் NHIS மூலம் சிகிச்சை பெறலாம் என வரையறை செய்யப்படாத மருத்துவமனைகளில் அவசர சூழலில் சிகிச்சை பெறுவோர் அதற்கான தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் கூடுதலாக இத்திட்டத்திற்கு additional premium per emoyee , per annum ரூ.50 செலுத்த வேண்டும் என்று உள்ளதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றாக கவனிக்கவும் per employee, per annum. எனவே இதனை தேவைப்படுவோர் செலுத்த வகைசெய்து 2018 லேயே அரசாணை வந்ததை பார்வை 2 ல் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர். இதனை ஆசிரியர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே தற்போது கூடுதலாக ரூ. 50 உயர்த்தப்படவில்லை.

பொதுவாக அரசாணைகளில் பார்வையில் குறிப்பிடப்படுகிற அரசாணைகளை ஒவ்வொன்றாக அதனைப்பற்றிக் குறிப்பிட்டு, அதன்பின்னரே வெளியிடப்படும் அரசாணை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த NHIS ஓராண்டு நீட்டிப்பு அரசாணையிலும் பார்வை 2 ல் உள்ள அரசாணையில் 2018 ல் non network hospitals களில் அவசர சூழலில் சிகிச்சை செய்வோர் அதற்காக தொகையை திரும்பப் பெற கூடுதலாக additional premium per employee per annum எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி
Thomas Rockland