. -->

Now Online

FLASH NEWS


Thursday 21 January 2021

தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டு மாணவர்களுக்கு கொரோனா உறுதி




தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலத்தில் 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி; தும்பல் ஊராட்சியில் உள்ள பள்ளியில் மேற்கொண்ட பரிசோதனையில் மாணவருக்கு தொற்று உறுதியானது!

சேலத்தில் பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

காய்ச்சல், சளி இருந்ததை அடுத்து மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில்,
கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து பரவவில்லை;

கொரோனா பரிசோதனை கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்கு வந்துள்ளார் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.



ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது

*கடந்த 19ம் தேதி தும்பல் அரசு மருத்துவமனையில் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி

*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி

*விடுதியில் தங்கியுள்ள 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.