தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மூன்று பள்ளிகளை தேர்வு செய்து அரசின் சிறந்த பள்ளி விருது கேடயம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2018-2019 ஆம் ஆண்டின் நீலகிரி மாவட்டத்தில் மூன்று பள்ளிகளில் ஒரு பள்ளியாக கோத்தகிரி வட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குண்டாடா தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் சிறந்த பள்ளி விருது கேடயத்தை , நேற்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா அவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு அர்ஜுணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு கப்பச்சி வினோத், முதன்மை கல்வி அலுவலர் திரு நாசரூதின், மாவட்ட கல்வி அலுவலர் திரு ராஜசேகர பாண்டியன், மற்றும் வட்டார கல்வி அலுவலர் திருமதி சரஸ்வதி முன்னிலையில், குண்டாடா அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு நஞ்சுண்டன் அவர்களிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை, புரவலர் திட்டம் ஊக்குவிப்பு, பள்ளி கட்டமைப்பு வசதி, மாணவர் கற்றல் திறன்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி,கலை இலக்கியப் போட்டிகளில் சாதனைகள், திறன் தேர்வுகளில் தேர்ச்சி, அறிவியல் கண்காட்சிகள், சுற்றுச்சூழல்,மரம் நடுதல்,அனைத்து விழிப்புணர்வு கூட்டங்கள், தேசிய விழாக்கள் கொண்டாடுதல், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மேலாண்மை குழுவின் சிறந்த செயல்பாடுகள் , அதோடு தலைமை ஆசிரியர் திரு நஞ்சுண்டன் அவர்களின் தலைமைப் பண்புகள், ஆசிரியைகள், மாணவ மாணவியர்க்கு வழிகாட்டுதல், ஆளுமைத் திறன் ஆகியவற்றிற்காக சிறந்த பள்ளி விருது கேடயம் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.இவரது கல்வி சேவை பயணத்தில் சிறந்த பள்ளி விருது மூன்றாவது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.