t> கல்விச்சுடர் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயருகிறதா? - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

2 February 2021

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60ஆக உயருகிறதா?

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக
உயர்த்தி, கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்வர் பழனிசாமி
உத்தரவிட்டார். இதனால் 25 ஆயிரம் பேருக்கு மேலும் ஓராண்டு
அரசுப்பணியில் தொடர வாய்ப்பு கிடைத்தது.

ஓய்வு வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் வரவேற்ற
வேளையில், சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன
இதற்கிடையில் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற
கோரிக்கையும் வந்தது

இந்நிலையில் அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக
உயர்த்துவது குறித்து, முதல்வர் நேற்று திடீரென ஆலோசனைக்
கூட்டம் நடத்தினார். இதில் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன்,
நிதித்துறை செயலர் கிருஷ்ணன், பணியாளர் நிர்வாகத்துறை
செயலர் ஸ்வர்ணா, முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர்.
சட்டசபை தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL