t> கல்விச்சுடர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்.. வருமாறு.. - கல்விச்சுடர் . -->

 

Now Online

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் மேலான படைப்புகளை கல்விச்சுடர் இணைய தளத்தில் பதிவு செய்ய தங்களின் முழு முகவரியுடன் 8438 569 569 என்ற எண்ணிற்கு WHATSAPP-ல் அல்லது udhayakumarind@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றியுடன் கல்விச்சுடர்...

Pages


.

1 September 2025

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்.. வருமாறு..




பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

இன்று வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு தீர்ப்பின் குறிப்புகள்..
வருமாறு..

 அனைத்து ஆசிரியர்களும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..


 சர்வீஸில் இறுதி நிலையில் இருக்கும் அதாவது 55 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் அவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர்கள் பணியில் தொடரலாம்..

 ஆனால் பதவி உயர்வு வேண்டுமென்றால் அவர்கள் உடனடியாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்..

 அனைத்து ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கால நிர்ணயம்..

ஒரு ஆசிரியர் தனது பணியை தொடரவே இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 பதிவி உயர்வுக்கு கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பணி நிறைவுக்கு 5 ஆண்டுகள் உள்ளவர்களுக்கு விலக்கு. மற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம்.


29/7/2011 க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர இரண்டு ஆண்டுகளுக்குள்
தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம்...

*29/7/2011 முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற தகுதித்தேர்வு அவசியம்...

JOIN KALVICHUDAR CHANNEL