. -->

Now Online

FLASH NEWS


Monday 22 February 2021

இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்காமல் உடனே நடத்தவேண்டும் - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு




உயர்நிலை மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வை பள்ளிக்கல்வித்துறை நடத்தவில்லை தற்போது நடத்த உத்தேசித்து அதற்கான பதவி மூப்புப்பட்டியலை தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட்டு ஓரிரு பாடப்பிரிவிற்கான பெயர்பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருப்பதாக அறிகிறேன், ஏற்கனவே ஆறு ஆண்டுகள் காத்திருந்து தற்போதும் தள்ளிவைத்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது , தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் அவர்களின் நியாயத்தை உணர்ந்து உடனே இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வை காலம் தாழ்த்தாமல் உடனே நடத்தி உதவிட வேண்டுகிறேன்,

அதேபோன்று மேனிலைக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறைகளில் இந்த ஆண்டு பொது இட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை , எப்போதும் பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது வழக்கம் இதனையிம் நினைவில்கொண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்திவிட்டு பின்பு பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு , முதுநிலை பட்டதாரி ஆசிரியர் , மற்றும் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவேண்டும்

அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை வரவேற்கின்றோம் அதே வேலையில் நேரடியாக முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளிப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது, அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கினால் அவர்களுக்கு பெருமளவில் சிரமம் இருக்காது,

தேர்தல் அறிவிப்பிற்கு முன் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த தமிழக அரசையும் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர்
சா.அருணன் கூறியுள்ளார்.