. -->

Now Online

FLASH NEWS


Tuesday 23 February 2021

நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் தெரியுமா?



நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது.

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது.

நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
அவை ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகின்றது.

நீரழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவுகின்றது. நெல்லிக்காயில் உள்ள குரோமியம் நீரழிவு சிகிச்சைக்கு மிகவும் பயன் தரும்.

வறண்ட சருமத்தின் காரணமாக உண்டாகும் பிரச்சினைகளுக்கு நெல்லிக்காயை சாப்பிட்டால் ஒளிரும் சருமம் கிடைக்கின்றது.

இதய நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவதால் இதய தசை வலுப்படுத்தும், அதோடு உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தையும் சீர் படுத்துகின்றது. இது உடலில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கவும் உதவி செய்கின்றது.