CBSE மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் தொடங்கும்
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதனால் சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்புகளின் இறுதித்தேர்வுகளை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடத்த வேண்டும் என்றும், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் தெரிவித்துள்ளது.