t> கல்விச்சுடர் சட்டசபை தேர்தலுக்கு பின் பிளஸ் 2 செய்முறை தேர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 March 2021

சட்டசபை தேர்தலுக்கு பின் பிளஸ் 2 செய்முறை தேர்வு





பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்தலுக்கு
பின் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த
ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மே, 3ல் துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது.

தேர்வு தேதிக்கு முன், ஏப்., 6ல் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து விடுகிறது. இதனால், பிளஸ் 2
மாணவர்களுக்கு பொதுத்
தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய காலத்தில் முடிக்கவும், போதிய கால
அவகாசம் கிடைத்து உள்ளது.

எனவே, இந்த அவகாசத்தை
பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறை தேர்வை,
சட்டசபை தேர்தலுக்கு பின், ஏப்ரலில் நடத்தி கொள்ள பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.

அதுவரை, மாணவர்களுக்கு பாடங்களை
தொடர்ந்து நடத்தவும், திருப்புதல் தேர்வு
களை நடத்தி, மாணவர்களை பொதுதேர்வுக்கு
தயார்ப்படுத்தவும்,

பள்ளி ஆசிரியர்களுக்கு
முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை
வழங்கியுள்ளனர்.


JOIN KALVICHUDAR CHANNEL