t> கல்விச்சுடர் பெண்மையை போற்றுவோம் - மகளிர் தின சிறப்பு கவிதை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

7 March 2021

பெண்மையை போற்றுவோம் - மகளிர் தின சிறப்பு கவிதை

பிறப்பின்
அழகாய் மிளிரும்
மிகச்சிறந்த படைப்பாய்
மென்மையாய் இப்புவியில்
பூத்தவளே பெண்

பகல் போல்
பால்வண்ண
பளிங்காய்
இவ்வுலகில்
உறவுகளுக்கு
கிடைத்தவள் பெண்

இருபது வயதுவரை
பிறந்த வீட்டிலும்
வாழ்வின் இறுதிவரை
புகுந்த வீட்டிலும்
மனம் கொஞ்சமும்
சளைக்காமல்
அனைவரையும்
அரவணைக்கும்
அன்பான புன்னகைக்கு
சொந்தமானவள்

பெண் என்பவள்
ஒரு நாளும்
அவளுக்காய்
வாழ்ந்ததில்லை

பிறந்த வீட்டில்
உடன்பிறப்புகளுகாய்
பெற்றோருக்காய்

புகுந்த வீட்டில்
உறவுகளுக்காய்

தியாகியாக வாழ்வதே
அவளின் உயரிய
குணமன்றோ

உயிருள்ளவரை
தன்னை தியாகம்
செய்பவள் பெண்

பெண் என்பவள்
ஒரு புத்தகம்
அவளின் அன்பென்பதே
அதன் பக்கங்கள்

எத்தனை புத்தகங்கள் எழுதினாலும்
இன்று வரை
முற்றுப் பெறா
புத்தகமும் பெண் தான்

ஒன்றை நூறாக்குபவள்

நூறை நூறு
கோடி ஆக்குபவள்
அவளின்றி உலகமேது

கோடிக்கணக்கான
கற்பனைகள்

லட்சக்கணக்கான
முயற்சிகள்

ஆயிரக்கணக்கான
தோல்விகளில்

உருவானவள்
தான் பெண்

பெற்ற வலியையும்
மறந்து உற்ற
பிள்ளைகளை
பாதுகாக்கும்
உன்னத உயிரவள்

உறவுகளின்
எண்ணங்கள்
முழுவதையும்
வண்ணங்கள்
ஆக்குபவள்

பிள்ளைகளின்
சிறகுகளை
வருடிக்கொண்டே
அவர்களின்
வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தி உயரே பறக்க
ஏணிப்படியாகுபவள்

அன்புக்கு அர்த்தம் அவள்

அன்பென்ற ஒற்றை சொல்லே அனைத்திற்கும்
மூலமென்பர்

உலகில்
விலையேதுமில்லா
விலைமதிப்பில்லா
பெண்ணின் அன்பை
அள்ளி அள்ளி வழங்கி
அனைவரையும் உயர்த்தி
தானும் உயர்பவள்

பெண்ணுக்குள் தான்
எத்தனை எத்தனை
பரிணாமங்கள்

கருணையில்
தெரேசாவாய்

வீரத்தில் வேலு
நாச்சியாராய்

துணிச்சலில் 
கல்பனா சாவ்லாவாய்

குடும்பத்தின் 
நிதி அமைச்சராய்

அறிவில்
அரவணைப்பில்
பொறுமையில்
சுறுசுறுப்பில் 
கட்டிக் காப்பதில்
தட்டிக் கொடுப்பதில்
உலகம் இன்னும்
உயிரோட்டமாய்
உழன்று கொண்டிருப்பதும் பெண்ணால்தான் 
என்று பெருமிதம்
கொள்வோம்

மகளாய் 
உடன் பிறப்பாய்
புகழ் மாணவளாய்
தாரமாய்
பின் தாயாய்
உறவுகளை
சத்தமின்றி
தாங்கிப் பிடிப்பவள்

எத்தனை 
இடையூறுகள்
வந்திடினும்
நொடிப்பொழுதில்
தீர்வு கண்டிடுவாள்
தன் ஈடில்லா 
அன்பால்

பெண்களின்
பெருமையை போற்றுவோம் 
இந்நாளில்
மட்டுமன்றி
எந்நாளும்...

✍️ கவிதாயினி 
      சுகந்தீனா

JOIN KALVICHUDAR CHANNEL