அரசு ஆணைகளைப் பராமரிக்க வேண்டிய கால அளவிற்கேற்ப ஆறு
வகையாகப் பிரித்து தனித்தனி வரிசையில் எண்ணிடப்படும்.
1. G.O (Ms) - அ.ஆ (நிலையானது) (*Ms - Manuscript)
2. G.O (D) - அ.ஆ (பத்தாண்டு) (*D - Decennium)
3. G.O (1 D) - அ.ஆ (இருபது ஆண்டு)
4. G.O (2 D) - அ.ஆ (முப்பது ஆண்டு)
5. G.O (3 D) - அ.ஆ (நாற்பது ஆண்டு)
6. G.O (4 Rt) - அ.ஆ (வாலாயம்) (* Rt - Routine)
அரசாணைகளை அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ள காலத்திற்குப்
பராமரித்து அதற்குப் பின்னரே அழிக்க வேண்டும் (Destruction). அ.ஆ
(வாலாயம்) என்று குறிப்பிட்டுள்ள அரசு ஆணைகளை மூன்று வருடங்கள்
பராமரித்து அதற்குப் பின்னர் அழிக்க வேண்டும்.
கல்விச்சுடர்
மற்ற அரசு
ஆணைகளைத் தலைமைச் செயலகத் துறை அலுவலகங்களில்
பராமரித்து ஐந்து ஆண்டுகள் கடக்கும் நிலையில்,
அவற்றைப்
பாதுகாப்பாகப் பராமரிக்க சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக்
காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.
அனைத்து அரசு ஆணைகளுக்கும் திருத்தம் வழங்கலாம்; அவற்றை
ரத்தும் செய்யலாம். எனவே, G.O (Ms) அ.ஆ (நிலையானது) என்று
குறிப்பிட்டுள்ள அரசு ஆணைகளை ரத்து செய்ய முடியாது என்று
சொல்வது சரியல்ல; நிரந்தரமாகப் பராமரிக்க வேண்டும்
என்பதற்காகவே அ.ஆ (நிலையானது) என்று குறிப்பிடப்படுகிறது.
(குறிப்பு: அ.ஆ என்றால் அரசு ஆணை என படிக்கவும்)