t> கல்விச்சுடர் தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் - கல்வித்துறைக்கு கோரிக்கை!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 April 2021

தமிழக பள்ளிகளில் ஏப்ரல் 20 கடைசி வேலை நாள் - கல்வித்துறைக்கு கோரிக்கை!!


தமிழகத்தில் கொரோளா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக
அதிகரித்து வரும் நிலையில், இந்த கல்வியாண்டிற்கான கடைசி வேலை
நாளாக ஏப்ரல் 27ம் தேதியை அறிவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை
இயக்குனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் வேலை நாள்:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு
நடைபெற உள்ள நிலையில் அவர்களுக்கு மட்டும் நேரடி முறையில்
பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான
மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்குவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள்
சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் என பள்ளிக்
கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும்
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினசரி புதிய
உச்சத்தை எட்டி வருகிறது

இதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ஒத்திவைத்து நேரடி
வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே ஆசிரியர்கள் சார்பில்
கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே பொதுத்தேர்வினை நடத்துவது குறித்து
நேற்று தலைமை செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்கான
முடிவுகள் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் பதவி
உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்க தலைவர் சார்பில்,

பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு
உள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL